பாடல்
வெள்ளி மலை பொதிகை மலை
வேடர் மலை காடர் மலை
எங்கள் மலை அம்மே...
வேலன் விளையாடும் பழனி மலை
எங்கள் மலை அம்மே.. அ அ...
வெள்ளி மலை பொதிகை மலை
எங்கள் மலை அம்மே
எங்கள் மலை அம்மே
வேலன் விளையாடும் பழனி மலை
எங்கள் மலை அம்மே
வேலன் விளையாடும் பழனி மலை
எங்கள் மலை அம்மே
உள்ளபடி குறி உரைக்கும்
மலை குறத்தி அம்மே
மலை குறத்தி அம்மே
இன்று உள்ளதையே நான் எடுத்து
உனக்குரைப்பேன் அம்மே
இன்று உள்ளதையே நான் எடுத்து
உனக்குரைப்பேன் அம்மே
வன குறவத்தினில் புனக் கிளியே
ஒரு மானின் வயிற்றிலே பிறந்தாய்
நம்பி மன்னன் மகள் என வளர்ந்தாய்
வன குறவத்தினில் புனக் கிளியே
ஒரு மானின் வயிற்றிலே பிறந்தாய்
நம்பி மன்னன் மகள் என வளர்ந்தாய்
வஞ்சி மனத்தினிலும் மஞ்சள் முகத்தினிலும்
நல்ல மையல் தவழ்ந்திட மலர்ந்தாய்
ஒரு மாய நிலாவென எழுந்தாய்
அரச முறைப்படி தினைப்புனம் காத்திட
அழகு சிலையென நின்றாய்
அரச முறைப்படி தினைப்புனம் காத்திட
அழகு சிலையென நின்றாய்
அங்கு ஆலோலம் பாடிட வந்தாய்
அங்கு ஆலோலம் பாடிட வந்தாய்
ஆலோலம் பாடிடும் வேளையிலே.. ஏ..
நல்ல ஆகாய மார்கத்து வீதியிலே
அந்த நாரத மாமுனி தான் வருவான்
வள்ளி நாயகி நீ அவன் தாள் பணிவாய்..
ஆண்டி ஒரு சன்னியாசி
அவனுக்கு திருமணம் பேச வருவான்
வேண்டுமென்றே நீ கோபம் கொண்டு
விருப்பமில்லை என்று நடித்திடுவாய்
நாரதனும் கல்யாணம் நடக்குமென்று
உன்னிடத்தில் சபதம் செய்வான்
நாரதனும் கல்யாணம் நடக்குமென்று
உன்னிடத்தில் சபதம் செய்வான்
அது நடக்காது நாரதரே
நான் தினம் கன்னி என்று மறுத்துரைப்பாய்
அது நடக்காது நாரதரே
நான் தினம் கன்னி என்று மறுத்துரைப்பாய்
வண்ண முகம் கொண்டு
வில் ஒன்று கை கொண்டு
மானை துறத்திடும் வேடன்
கண்கள் மான் உன்னையே
வந்து நாடும்
வண்ண முகம் கொண்டு
வில் ஒன்று கை கொண்டு
மானை துறத்திடும் வேடன்
கண்கள் மான் உன்னையே
வந்து நாடும்
அடி இம்மான் ஒரு பெண் மான் மகள்
அம்மான் மகள் என் மானென
வள்ளி என்றுன்னை அழைப்பான்
பல வம்புகள் பேசியே மறைவான்
தள்ளாட உடல் தள்ளாட
ஒரு பழுத்த கிழவன் வருவான்
அவன் தளர்ந்து போன முதுமை கண்டு
தங்க இடம் தருவாய்
தள்ளாட உடல் தள்ளாட
ஒரு பழுத்த கிழவன் வருவான்
அவன் தளர்ந்து போன முதுமை கண்டு
தங்க இடம் தருவாய்
பசி எடுக்குது தேனும் தினையும்
பருக வேண்டும் என்பான்
பசி எடுக்குது தேனு தினையும்
பருக வேண்டும் என்பான்
நீ பருக தந்தால்
நீ பருக தந்தால்
தாகம் தீர்ந்து
மோகம் வந்தது என்பான்
நீ பருக தந்தால்
தாகம் தீர்ந்து
மோகம் வந்தது என்பான்
கரத்தை பிடிக்கும் பழுத்த பழத்தை
துறத்தி விரட்ட நினைப்பாய்
அவன் அழைத்த யானை அருகில் வந்ததும்
தன்னை மறந்து அணைப்பாய்
கரத்தை பிடிக்கும் பழுத்த பழத்தை
துறத்தி விரட்ட நினைப்பாய்
அவன் அழைத்த யானை அருகில் வந்ததும்
தன்னை மறந்து அணைப்பாய்
LYRICS
veLLi malai podhigai malai
vedar malai kaadar malai
engaL malai amme...
velan viLaiyaadum pazhani malai
engaL malai amme.. a a...
veLLi malai podhigai malai
engaL malai amme
engaL malai amme
velan viLaiyaadum pazhani malai
engaL malai amme
velan viLaiyaadum pazhani malai
engaL malai amme
uLLapadi kuri uraikkum
malai kurathi amme
malai kurathi amme
indru uLLadhaiye naan eduthu
unakkuraipen amme
indru uLLadhaiye naan eduthu
unakkuraipen amme
vana kuravathinil puna kiLiye
oru maanin vayitrile pirandhaai
nambi mannan magaL en vaLarndhaai
vana kuravathinil puna kiLiye
oru maanin vayitrile pirandhaai
nambi mannan magaL en vaLarndhaai
vanji manathinilum manjaL mugathinilum
nalla maiyal thavazhndhida malarndhaai
oru maaya nilaavena ezhundhaai
arasa muraipadi thinaipunam kaathida
azhagu silaiyena nindraai
arasa muraipadi thinaipunam kaathida
azhagu silaiyena nindraai
angu aalolam paadida vandhaai
angu aalolam paadida vandhaai
aalolam paadidum veLaiyile..e..
nalla aagaaya maargathu veedhiyile
andha naaradha maamuni thaan varuvaan
vaLLi naayagi nee avan thaaL paNivaai...
aaNdi oru sanniyaasi
avanukku thirumaNam pesa varuvaan
vendumendre nee kobam koNdu
viruppamillai endru nadithiduvaai
naaradhanum kalyaaNam nadakumendru
unnidathil sabadham seivaan
naaradhanum kalyaaNam nadakumendru
unnidathil sabadham seivaan
adhu nadakaadhu naaradhare
naan thinam kanni endru maruthuraipaai
adhu nadakaadhu naaradhare
naan thinam kanni endru maruthuraipaai
vaNNa mugam koNdu
vil ondru kai koNdu
maanai thurathidum vedan
kaNgaL maan unnaiye
vandhu naadum
vaNNa mugam koNdu
vil ondru kai koNdu
maanai thurathidum vedan
kaNgaL maan unnaiye
vandhu naadum
adi imman oru peN maan magaaL
ammaan magaL en maanena
vaLLi endrunnai azhaippaan
pala vambugaL pesiye maraivaan
thaLLaada udal thaLLaada
oru pazhutha kizhavan varuvaan
avan thaLarndhu pona mudhumai kaNdu
thanga idam tharuvaai
thaLLaada udal thaLLaada
oru pazhutha kizhavan varuvaan
avan thaLarndhu pona mudhumai kaNdu
thanga idam tharuvaai
pasi edukkudhu thenum thinaiyum
paruga veNdum enbaan
pasi edukkudhu thenum thinaiyum
paruga veNdum enbaan
nee paruga thandhaal
nee paruga thandhaal
thaagam theerndhu
mogam vandhadhu enbaan
nee paruga thandhaal
thaagam theerndhu
mogam vandhadhu enbaan
karathai pidikkum pazhutha pazathai
thurathi viratta ninaipaai
avan azhaitha yaanai arugil vandhadhum
thannai marandhu aNaipaai
karathai pidikkum pazhutha pazathai
thurathi viratta ninaipaai
avan azhaitha yaanai arugil vandhadhum
thannai marandhu aNaipaai